டிட்வா புயல் காரணமாக கடந்த இரண்டு தினங்களாக தமிழகத்தில் ஆங்காங்கே மிக கனமழை பதிவாகி வருகிறது, புயல் வலுவிழந்தாலும் மழை பொழிவு இருந்து வருகிறது, அந்தவகையில்,
நாளை மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களான நீலகிரி, கோவை, ஈரோடு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலம், நாமக்கல், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில், கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் சென்னை எண்ணூரில் 26 சென்டி மீட்டரும், பாரிமுனையில் 25 சென்டி மீட்டரும், ஐஸ்அவுஸ் பகுதியில் 22 சென்டி மீட்டரும் மழை பதிவாகி இருக்கிறது. மணலி மற்றும் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் தலா 21 சென்டி மீட்டர் மழை பெய்திருக்கிறது. நுங்கம்பாக்கம் மற்றும் டிஜிபி அலுவலகம் சுற்றுவட்டாரத்தில் தலா 14 சென்டி மீட்டர் மழை பெய்திருக்கிறது.














