அரியானா மாநிலத்தில் கூடைப்பந்து பயிற்சியின்போது கம்பம் சரிந்து விழுந்ததில் விளையாட்டு வீரர் பலியானார்.
அரியானா மாநிலம் ரோத்தக் பகுதியை சேர்ந்த ஹர்த்திக் ரதி தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டிகளில் பங்கேற்று வந்தார். இவர் விளையாட்டு மைதானத்தில் தனியாக பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது கூடைப்பந்து வளையத்தில் தொங்க முயற்சித்தார். அப்போது எதிர்பாராத வகையில் அந்த கம்பம் சரிந்து ஹர்த்திக் மீது விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.
















