இந்தியாவில் தற்கொலையின் தலைநகரமாக தமிழ்நாடு உள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
கோவை கவுண்டம்பாளையத்தில் தனியார் கல்லூரி சார்பில் சிந்து சரஸ்வதி நாகரிகம் தொடர்பான மாநாடு இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இதன் தொடக்க விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசிய குற்ற ஆவண விவரப்படி தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 20 ஆயிரம் பேரும், நாள் ஒன்றுக்கு 65 பேரும் தற்கொலை செய்துகொள்வதாகத் தெரிவித்தார்.
ஆரியம், திராவிடம் என மக்களைப் பிரிக்க நினைப்பவர்கள் தோற்றுப்போவார்கள் என்றும், அவர்களிடம் பொய் தான் உள்ளதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
ver

















