செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே பயிற்சி விமானம் கீழே விழுந்து நொறுங்கிய நிலையில், அதிலிருந்த விமானி உட்பட 3 பேர், முன்னதாகவே பாராசூட் மூலம் கீழே குதித்து உயிர் தப்பினர்.
மாமல்லபுரம் அருகே திருப்போரூர் பகுதியில் சிறிய ரக பயிற்சி விமானம் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அதிலிருந்த விமானி உட்பட 3 பேர், பாராசூட் மூலம் முன்னதாகவே விமானத்தில் இருந்து கீழே குதித்து உயிர் தப்பினர்.
கோளாறு ஏற்பட்ட விமானம், கட்டுமானப் பணி நடைபெற்ற இடம் அருகே, சகதியில் விழுந்து நொறுங்கியது. ஆட்கள் யாரும் இல்லாத இடத்தில் விமானம் விழுந்ததால், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை. விமான விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மாமல்லபுரம் அருகே பயிற்சி விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

















