பீகாரில் நாளை முதல் கட்ட தேர்தல் நடக்கும் சூழலில், அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு, மின்னணு வாக்கு இயந்திரங்களை அனுப்பும் பணி துவங்கி இருக்கிறது.
பீகாரில் 243 சட்டசபை தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல்கட்டமாக 18 மாவட்டங்களில் உள்ள 121 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது. மீதம் உள்ள 123 தொகுதிகளுக்கு 11-ந் தேதி தேர்தல் நடைபெறும். 2 கட்ட தேர்தலில் பதிவாகும் வாக்குகள், 14-ந் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. முதல்கட்ட தேர்தலில் மொத்தம் ஆயிரத்து 192 ஆண்கள், 122 பெண்கள் என, ஆயிரத்து 314 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு, மின்னணு வாக்கு இயந்திரம், கட்டுப்பாட்டு கருவி மற்றும் வாக்குப்பதிவுக்கு தேவையான உபகரணங்களை அனுப்பி வைக்கும் பணி, தற்போது துவங்கி இருக்கிறது.
















