கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் மின் கம்பி அறுந்து விழுந்ததில் கணவன் மனைவி உட்பட மூன்று பேர் மின்சாரம் தாக்கி பரிதபமாக உயிரிழந்தனர்.
சிதம்பரம் சுற்றுவட்டார பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.இந்த நிலையில் சாத்தமங்கலம் கிராமத்தில் வீசிய சூறாவளி காற்றால் புளியமரம சூசை என்பவரின் வீட்டின் மீது விழுந்தது. புளியமரம் அங்கிருந்த மின்சார கம்பி மீது விழவே அது அறுந்து வீட்டின் வாசலில் அமர்ந்து இருந்த சூசை அவரது மனைவி மேரி ஆகியோர் மீது விழ சம்பவ இடத்திலேயே மின்சாரம் பாய்ந்து அவர்கள் உயிரிழந்தனர், மேலும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒரு பெண்மணியும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார், கனகராஜ் என்பவர் படுகாயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்களை கைப்பற்றிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.















