திருவண்ணாமலை கிரிவல பாதுகாப்பு ஏற்பாடு – டிஜிபி வெங்கட்ராமன் ஆய்வு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், கார்த்திகை தீபத்திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து, தமிழக பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழா வரும் 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. டிசம்பர் மூன்றாம் தேதி அண்ணாமலையார் கோவில் முன்பாக, அதிகாலை பரணி தீபமும், மாலை 6 மணிக்கு, மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். இந்த தீபத்திருவிழா நிகழ்ச்சியில், லட்சக்கணக்கானோர் பங்கேற்பார்கள். இதையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, திருவண்ணாமலையில் தமிழக பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன், நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது வேலூர் சரக டி.ஐ.ஜி தர்மராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

Exit mobile version