தென் மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள, டிட்வா புயல் சென்னைக்கு தென்கிழக்கே 530 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் காரணமாக, காவிரி டெல்டா மற்றும் தமிழகத்தின் வடகடலோர மாவட்டங்களில், 3 நாட்கள் அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு தெற்கே, தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து, புயலாக மாறியுள்ளது. டிட்வா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல் மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து, நாகை, காரைக்காலுக்கு தென்கிழக்கே 320 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 430 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தென் கிழக்கே 530 கிலோ மீட்டர் தொலைவிலும், புயல் மையம் கொண்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.















