வங்க கடலில் நேற்று உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அதன்பிறகு, 26-ந்தேதி புயலாக மாறும் என்றும், வானிலை மையம் கணித்துள்ளது.
அந்தமான் கடல் தென்கிழக்கு மற்றும் தமிழக கடல் பகுதியில், மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என, மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருக்கும் மீனவர்கள், நாளைக்குள் கரைக்கு திரும்ப வேண்டும் எனவும், மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
















