சீனாவில் ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த புத்த விஹாரத்தில் தீ விபத்து ஏற்பட்டு முற்றிலும் எரிந்து சாம்பலானது.
சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள ஜாங்ஜியாகாங்கில் லியாங் வம்சத்தைச் சேர்ந்த பௌத்த விஹாரம் உள்ளது. ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமையான இந்த யோங்கிங் விஹாரத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. பல மாடி மர அமைப்புகளை கொண்ட இந்த கோவில் எரிந்து முற்றிலும் எலும்புக்கூடானது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத்துறையினர், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டும் பலனில்லாமல் போனது. அதற்குள் கோவில் முற்றிலும் எரிந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாகவும், இதில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை எனவும் தெரிய வந்துள்ளது.
