சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே, காட்டுப் பகுதியில் காருக்குள் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
காரைக்குடி மருதுபாண்டியர் நகரைச் சேர்ந்த மகேஸ்வரியின் கணவர் பாண்டிகுமார் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர்களது ஒரு மகள் வெளிநாட்டில் மருத்துவம் படித்து வருகிறார். 10-ம் வகுப்பு படிக்கும் மற்றொரு மகளுடன் மகேஸ்வரி காரைக்குடியில் வசித்து வந்தார்.
இந்நிலையில், நிலம் வாங்குவது தொடர்பாக ஆவுடைப் பொய்கை பகுதிக்கு தனது காரில் மகேஸ்வரி சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், அங்கிருந்த காட்டுப் பகுதியில் தனியாக நின்றிருந்த காரின் பின் இருக்கையில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் அவர் சடலமாக கிடப்பது தெரியவந்தது. தேவகோட்டை டிஎஸ்பி கவுதம் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர். 2 தனிப்படை போலீஸார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
