முதல்கட்ட தேர்தல் பிரசாரம் இன்றுடன் நிறைவு – ஓட்டுப்போட தயாரான பீகார் மக்கள்

பீகார் மாநில சட்டசபைக்கு முதல்கட்டமாக வரும் 6-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள 121 தொகுதிகளில் இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் நிறைவடைகிறது.

பீகாரில் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 121 தொகுதிகளில் நாளை மறுநாளும், எஞ்சியுள்ள 122 தொகுதிகளில் வரும் 11-ம் தேதியும் தேர்தல் நடைபெறவுள்ளது.

முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பிஜேபி உள்ளிட்ட கட்சிகளை உள்ளடக்கிய தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், இடதுசாரிகளை உள்ளடக்கிய இந்தியா கூட்டணிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஜன் சுராஜ் கட்சி 239 தொகுதிகளில் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது.

Exit mobile version