பீகார் சட்டப்பேரவைக்கான முதல் கட்டத்தேர்தலில், 64 புள்ளி 66 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. இது, கடந்த தேர்தலைவிட அதிகமாகும்.
பீகாரில் மொத்தம் உள்ள 243 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்டமாக 121 தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை வாக்குப்பதிவு தொடங்கியது முதலே வாக்காளர்கள் குறிப்பாக பெண்கள் பெண்கள் அதிக அளவில் வந்து வாக்களித்தனர்.
மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மொத்தமாக 64 புள்ளி 66 சதவீத வாக்குகள் பதிவாகி இ ருப்பதாக தெரிவி க்கப்பட்டுள்ளது. இது கடந்த 2020ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவில் பதிவான 56 சதவீதத்தைவிட 8 சதவீதம் அதிகமாகும்.
எஸ்ஐஆர் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் தயாரித்ததன் மூலம், இறந்தபோன, முகவரி மாற்றத்தால் பல இடங்களில் இருந்த வாக்குகள் நீக்கப்பட்டதும், வாக்கு சதவீதம் அதிகரித்திருப்பதற்கு ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் சீலிடப்பட்டு பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது.
