இந்து மக்கள் கட்சியில் முக்கிய தீர்மானம் – அர்ஜுன் சம்பத்

பெண்களுக்கு ஆபத்து ஏற்படும் போது, போலீசாருக்கு தகவல் அளிக்கக்கூடிய காவலன் செயலி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்று இந்து மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

சென்னையில் இந்து மக்கள் கட்சியின் செயற்குழுக் கூட்டம் அதன் தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டததில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து பின்னர் செய்தியாளர்களுக்கு அர்ஜூன் சம்பத் பேட்டியளித்தார். தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை வரவேற்பது, தமிழகத்தில் பெண்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்குவது உள்ளிட்ட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகக் கூறினார்.

Exit mobile version