மழையால் பள்ளிகளில் தண்ணீர் தேங்காதவாறு நடவடிக்கை – அன்பில் மகேஷ் தகவல்

மழைக் காலங்களில், பள்ளிக்கூடங்களில் தண்ணீர் தேங்காதவாறு, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

2025-ஆம் ஆண்டிற்கான ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை போட்டிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் நடைபெற உள்ளது. இந்தக் கோப்பை தமிழகம் முழுவதும் கொண்டு செல்லப்படுகிறது.

அந்த வகையில், தஞ்சாவூரில் அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில், ஹாக்கி கோப்பை அறிமுகம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் கோவி செழியன், அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், மழைகாலத்தில் பள்ளியில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டிருப்பதாக கூறினார்.

Exit mobile version