கோவாவில் சர்வதேச திரைப்பட விழாவில், “கோல்டன் பீகாக்” விருதுக்கு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் முன் மொழியப்பட்டுள்ளது
இந்த விருதுக்கு உலக அளவில் பல திரைப்படங்கள் பரிந்துரைக்கப்படும், அந்தவகையில் இந்தியாவில் இருந்து 3 படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் ‘அமரன்’ திரைப்படமும் ஒன்று. இந்த திரைப்படம் நேற்று, கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர்கள் கமலஹாசன், குஷ்பு, சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்டோர் இன்று சென்னை திரும்பினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் படத்திற்கு, நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்றார்.
















