வங்கதேசத்திற்கு எதிரான மகளிர் உலகக்கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி, 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் வங்கதேசம் – நியூசிலாந்து அணிகள் மோதின. கவுகாத்தியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூசிலாந்து மகளிர் 50 ஓவர்கள் முடிவில், 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 227 ரன்கள் எடுத்தது.
228 ரன்கள் வெற்றி இலக்காகக் கொண்டு பின்னர் களமிறங்கிய வங்கதேச மகளிர் அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. 39 புள்ளி 5 ஓவர்களில், அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் நியூசிலாந்து அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்தத் தொடரில் முதல் வெற்றியை நியூசிலாந்து மகளிர் அணி பதிவு செய்துள்ளது.