விஜயின் த வெ க-விற்கு இந்த இரண்டு சின்னத்தில் ஒன்று தான்? – விரைவில் அறிவிப்பு

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது .இந்நிலையில் தமிழகத்தில் புதியதாக கட்சி தொடங்கி உள்ள நடிகர் விஜய் …தமிழகத்தில் மூன்றாவது அணியாக உருவெடுத்து உள்ளார் . திமுக மற்றும் அதிமுகவிற்கு மாற்றாக தன்னை நிலைநிறுத்த விஜய் முயன்று வருகிறார் . மேலும் தனக்கு இருக்கும் பெரிய ரசிகர் படையை வைத்து தமிழகத்தில் முதல்வர் ஆகிவிடலாம் என்ற ஆசையில் உள்ளார்.

தேர்தல் நெருங்கிகொண்டு இருக்கும் இந்த காலகட்டத்த்தில் தமிழக வெற்றி கழகம் தேர்ததுலுக்காக தன்னை தயார் படுத்தி வருகிறது . இதுவரை எந்த தேர்தலிலும் போட்டியிடாத தமிழக வெற்றி கழகம் 2026 சட்டமன்ற தேர்தலில் தான் முதன் முதலில் போட்டியிட உள்ளது .இதனால் தமிழக வெற்றி கழகத்திற்கு எந்த சின்னம் கொடுக்கப்படும் என்று தவெக தொண்டர்கள் ஆவலுடுன் காத்து இருக்கின்றனர் .

இந்நிலையில் விஜய் கட்சிக்கு ஆட்டோ அல்லது மோதிர சின்னம் தரப்படும் என்று கூறப்படுகிறது . அதுமட்டுமின்றி ஆட்டோ சின்னம் வேறு ஒரு கட்சிக்கு தரப்பட உள்ளதாகவும் எனவே மோதிரம் சின்னம் தான் விஜய் கட்சிக்கு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது . இது தொடர்பான அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது .

Exit mobile version