கருர் செல்லும் தேதி, நேரம், இடம், வரும் வழி மற்றும் நிகழ்ச்சி நிரல் போன்ற விபரங்களை மாவட்ட காவல்துறைக்கு சமர்ப்பிக்க விஜய் தரப்பிற்கு டிஜிபி அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.
கரூர் செல்வதற்கு அனுமதி மற்றும் நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு கேட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் டிஜிபி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்துள்ள டிஜிபி அலுவலகம் விஜயின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு தொடர்பாக தவெக சார்பில் ஒரு பிரதிநிதியை நியமித்து கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை தொடர்பு கொள்ள அறிவுறுத்தியுள்ளது.
நிகழ்ச்சி தொடர்பாக தேதி, நேரம், இடம், வரும் வழி மற்றும் நிகழ்ச்சி நிரல் போன்ற விபரங்களை மாவட்ட காவல்துறைக்கு சமர்ப்பிக்கவும் கூறியுள்ளது.
இந்த விபரங்கள் காவல்துறைக்கு அளிக்கப்பட்டவுடன் அந்நிகழ்ச்சிக்கு தேவையான பாதுகாப்பு,போக்குவரத்து ஏற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது.