கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், நாளை காலை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கடந்த மாதம் 27-ந்தேதி, கரூரில் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பாதிக்கப்பட்ட தரப்பினரை, வீடியோ காலில் பேசி ஆறுதல் கூறினார். அனைவரையும் விரைவில் சந்திப்பேன் என்றும் விஜய் கூறி இருந்தார்.
இந்நிலையில், கரூரில் விஜய் சந்திப்பு நிகழ்ச்சி நடத்துவதில், சிக்கல் எழுந்ததாக தெரிகிறது. இதையடுத்து, 41 குடும்பத்தினரையும், சென்னைக்கு அழைத்து பேச விஜய் முடிவு செய்துள்ளார். இதற்காக மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் 50-க்கும் மேற்பட்ட அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.நாளை பாதிக்கப்பட்ட தரப்பினரை விஜய் நேரில் சந்திக்கிறார்.

















