சட்டபேரவையில் பண்ருட்டி தொகுதி எம்எல்ஏ வேல்முருகனுக்கும், அமைச்சர் துரைமுருகனுக்கும் இடையே, வாக்குவாதம் ஏற்பட்டது.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய எம்.எல்.ஏ வேல்முருகன், காவிரி உபரி நீர் அந்தியூர் -பவானி தொகுதிக்கு செல்லவில்லை. அந்த தொகுதி மக்களுக்கு காவிரி உபரி நீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அந்தத் தொகுதி மக்களுக்கான கோரிக்கையை கேட்க, அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். பிற தொகுதி கோரிக்கையை நீங்கள் ஏன் கேட்கிறீர்கள்? அந்த தொகுதி மக்கள் கேட்டுக் கொள்வார்கள் என கூறியதால், பேரவையில் வேல்முருகன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, தேவையில்லாத பிரச்சனையை எழுப்ப வேண்டாம் என கூறியதோடு, எம்எல்ஏ வேல்முருகனை அவரது இருக்கையில் அமர சொன்னார். இதையடுத்து, வாக்குவாதம் முடிவுக்கு வந்தது.
