கேரள மாநிலத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், இடுக்கி அருகே, சுற்றுலா வேன் ஒன்று காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
கேரளாவின் பெரும்பாலான பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இடுக்கி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையால், கல்லார் அணை திறக்கபட்டுள்ளது. இதனால் நெடுங்கண்டம், வண்டிபெரியார் ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில், நெடுங்கண்டம் என்ற இடத்தில், சுற்றுலா வேன், ஆற்றின் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பெருமழை மற்றும் வெள்ளப் பெருக்கில் சிக்கிய வேன், ஆற்றில் அடித்து செல்லப்பட்டது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

















