பெரியாரியல் அறிஞர் வே.ஆனைமுத்துவின் நூற்றாண்டு நிறைவு விழா மலர் வெளியீடு நிகழ்ச்சி, சென்னையில் இன்று நடைபெற்றது. இதில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மலரினை வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழ்நாடு ஆளுநர் பிஜேபிக்கு ஆதரவு என நினைத்து நமக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தை தொடங்கியிருப்பதாக தெரிவித்தார். தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராகத்தான் போராடுகிறது. அதில் தமிழ்நாடு வென்று காட்டும் என்றும் குறிப்பிட்டார்.
தந்தை பெரியார் தமிழகத்தை பக்குவப்படுத்தி வைத்துள்ளார். இதனால் தான், பிஜேபியின் எந்த ஒரு தில்லு முள்ளும், தமிழக மக்கள் மத்தியில் எடுபடவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
கொள்கையற்ற இளைஞர் கூட்டம் தற்போது உருவாகியுள்ளதாக த.வெ.க-வை மறைமுகமாக விமர்சித்த உதயநிதி, அவர்களை கொள்கைப்படுத்துவது நம் அனைவரின் கடமை என்றும் கூறினார்.