சென்னை பழைய மகாபலிபுரம் சாலை பகுதிகளில் நடைபெரும் வெள்ளத்தடுப்பு பணிகளை, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து, சென்னையில் வெள்ளத் தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளன. இப்பணிகளை தொடர்ந்து கண்காணிக்கவும், முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒக்கியம் மடு, கண்ணகி நகர், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட இடங்களி வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். வடிகால்வாய்களில் மழைநீர் தடையின்றி செல்லும் வகையில், மெட்ரோ மற்றும் சாலைப்பணிகளை துரிதமாக முடிக்க, அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
