வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக, ரிப்பன் மாளிகையில் துணை முதல்வர் உதயநிதி ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை நாளை தொடங்கும் என, வானிலை மையம் கணித்துள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில், தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக, சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, நகராட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். பொது மக்களிடம் இருந்து வரும் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு, உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று, அதிகாரிகளுக்கு, துணை முதல்வர் அறிவுரை வழங்கினார்.