புதிய அடிமை என விஜயை மறைமுகமாக தாக்கிய உதயநிதி

புதிய அடிமைகளை கூட்டணியில் சேர்த்தாலும், பிஜேபியால் தமிழகத்தில் ஒருபோதும் காலூன்ற முடியாது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில், திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய உதயநிதி, கடந்த 4 ஆண்டுகளாக ஆளுநருடன் தான் தமிழ்நாடு போராடி வருவதாக குறிப்பிட்டு பேசினார், ஆர்.என்.ரவி செய்யும் அரசியலுக்கு நமது தலைவர் நீதிமன்றத்தின் மூலம் பதிலடி கொடுத்து வருவதாகவும் பேசினார். பிஜேபி எத்தனை சதிகள் செய்தாலும், அதனை திமுக அரசு முறியடிக்கும் எனவும் பேசிய உதயநிதி ஸ்டாலின் தற்போது வந்துள்ள புதிய அடிமைகளை பிஜேபி சேர்த்துக்கொண்டாலும் தமிழகத்தில் காலூன்ற முடியாது என விஜயை மறைமுகமாக குறிப்பிட்டு பேசினார்.

Exit mobile version