எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்ற நயினார் நாகேந்திரனின் கனவு ஒருபோதும் பலிக்காது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில், அக்கட்சியின் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், எடப்பாடி பழனிசாமி தனது சுயநலத்திற்காக எம்.ஜி.ஆர். உருவாக்கிய விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் மாற்றியதாக குற்றம்சாட்டினார்.
நைனாருக்கு நேத்துதான் பிறந்தநாள் வாழ்த்து சொன்னேன், இதுல அவர் நினைப்பது நடதுன்னு சொல்ல கஷ்டமா இருக்கு அதான் உண்மை என்றும், தமிழக மக்களின் துணையோடு, இ.பி.எஸ். செய்த துரோகத்தை வேரோடு மண்ணாக சாய்ப்போம் எனவும் டிடிவி தினகரன் சூளுரைத்தார்.
