திருவிடைமருதூர் அருகே, அரசுப்பள்ளியில், தடுப்புச்சுவர் இன்றி கழிவறை கட்டப்பட்ட சம்பவம், மாணவ மாணவிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் வட்டம், ஆடுதுறை அரசுப்பள்ளில், 34 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இதனை ஆடுதுறை பேரூராட்சி மன்ற தலைவர் ம.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். புதிதாக கட்டித் திறக்கப்பட்ட கழிவறையில், சிறுநீர் கழிக்கும் இடங்களில் தடுப்புச்சுவர் இன்றி வரிசையாக கட்டப்பட்டது. இதனால், மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்தனர். கட்டுமானத்தை உரிய முறையில் கண்காணிக்க தவறிய சம்மந்தப்பட்ட பொதுப்பணித்துறை அலுவலர் மீது அரசு துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்களும், மாணவ மாணவிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.