தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்- டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்-4 தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
இதனை, டிஎன்பிஎஸ்சி டாட் ஜிஓபி டாட் இன் (tnpsc.gov.in) என்ற இணையதளத்தின் மூலம் தேர்வர்கள் தெரிந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர், வனக்காவலர், வனக்காப்பாளர் ஆகிய 4 ஆயிரத்து 662 காலிப் பணியிடங்களை நிரப்ப, கடந்த ஜூலை 12ம் தேதி, இந்த குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டது. ஒரு பதவிக்கு சுமார் 250 பேர் என்ற விகிதத்தில், இந்தத் தேர்வை 11 லட்சத்து 48 ஆயிரம் பேர் எழுதினார்கள்.
 
			















