தெருக்களில் உள்ள சாதிப்பெயர்களை நீக்க தமிழக அரசு உத்தரவிட்டதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளன் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
சென்னை தலைமை செயலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுடன் சென்று. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை திருமாவளவன் இன்று சந்தித்து பேசினார். அப்போது, சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிந்து காத்திருக்கும் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் என முதலமைச்சரிடம் திருமாவளவன் வலியுறுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவையில் மேம்பாலத்திற்கு ஜி.டி நாயுடு பெயர் சூட்டப்பட்டதை அரசியல் ஆக்க கூடாது என்று கேட்டுக்கொண்டார். சென்னை மாநகராட்சியில் தூய்மை பணிகள் தனியாருக்கு தாரை வார்க்கப்படுவதை, வி.சி.க எதிர்ப்பதாகவும், இது தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படும் என்றும், திருமாவளவன் கூறினார்.