தமிழகத்தில் பீகார் மக்களை துன்புறுத்துகிறார்கள் என பிரதமர் பேசுவது ஆபத்தான அணுகுமுறை என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அகில இந்திய பத்திரிக்கையாளர் சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில், 2026 இல் யாருக்கு வாக்களிப்பது என்ற தலைப்பில் சென்னையில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், வாக்குகளை பெறுவதற்காக தமிழகத்தை தொடர்புபடுத்தி பிரதமர் பேசியிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.
பீகார் மட்டுமல்ல மற்ற மாநிலங்களை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களும் தமிழ்நாட்டில் பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இங்கு இல்லை என்றும் அவர் கூறினார். பிரதமர் திமுகவை குறிப்பிட்டு தான் பேசினார் என தமிழிசை சௌந்தர்ராஜன் கூறிய கருத்தை திருமாவளவன் நிராகரித்தார்.
 
			















