இந்துக்களை திமுக அரசு பாரபட்சத்துடன் நடத்துவதாகவும், மத்திய அரசு வழங்கிய நிதியை பயன்படுத்தாமல் தமிழர்களை கடனாளி ஆக்கிவிட்டதாகவும், முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது இல்லத்தில் வேல் வடிவிலான பட்டாசு வெடித்தும், இனிப்பு கொடுத்தும், தீபாவளியை தமிழிசை கொண்டாடினர். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தர்ராஜன், போலி மதசார்பின்மையை திமுக அரசு கடைப்பிடிப்பதை தமிழக அரசு பார்த்துக் கொண்டிருப்பதாகவும், வரும் தேர்தலில் இது எதிரொலிக்கும் என்றும் கூறினார்.
மத்திய அரசு வழங்கிய 14 ஆயிரம் கோடி ரூபாயை பயன்படுத்தாமல், தமிழர்களை திமுக அரசு கடனாளி ஆக்கிவிட்டதாகவும், தமிழிசை குற்றம்சாட்டினார்.
