சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் தொழில் அதிபர் ஒருவர், தனது 2 மகன்கள் மற்றும் மனைவியை கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்து கொண்டார். கடன் தொல்லையால் அவர், இந்த விபரீத முடிவை எடுத்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சிரஞ்சீவி தாமோதர குப்தா என்பவர், சென்னை அண்ணாசாலையில், சிசிடிவி கேமரா விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். இவர் தனது 2 மகன்கள் மற்றும் மனைவியுடன், ஈஞ்சம்பாக்கத்தில் குடியிருந்த நிலையில், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு, கடன் சுமை அதிகரித்ததாக தெரிகிறது.
இதனால், மன உளைச்சலுக்கு ஆளான தாமோதர குப்தா, 11 மற்றும் 15 வயதில் உள்ள 2 மகன்களின் முகத்தில், பிளாஸ்டிக் பையால் இருக்கமாக மூடி, மூச்சு திணறடித்து கொலை செய்துள்ளார். இதே பாணியில் மனைவி ரேவதியையும் கொலை செய்த அவர், பின்னர் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொண்டு, தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்வதற்கு முன்னதாக, தாமோதர குப்தா கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.
அதில், கடன் தொல்லை காரணமாக, இந்த முடிவை எடுத்ததாக குறிப்பிட்டுள்ளார். இதன் அடிப்படையில், நீலாங்கரை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
















