அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு நடிகர் விஜய்யின் த.வெ.க மற்றும் சீமானின் நாம் தமிழர் ஆகிய கட்சிகளுக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது.
எஸ்.ஐ.ஆர். எனப்படும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணியால் ஏற்படும் பதிப்புகள் குறித்து விவாதிப்பதற்காக, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில், வரும் 2ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி பல்வேறு கட்சிகளுக்கும் திமுக சார்பில் அழைப்புவிடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திமுக நிர்வாகியான பூச்சி முருகன், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை சந்தித்து, அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அதேபோல, சீமானின் நாம் தமிழர் கட்சி, ஜி.கே.வாசனின் த.மா.கா ஆகிய கட்சிகளுக்கும் திமுக அழைப்பு விடுத்திருக்கிறது.
















