வங்கதேசத்திற்கு எதிரான மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில், தென்னாப்பிரிக்கா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
மகளிர் உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற 14-வது லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா – வங்கதேச அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணி, 50 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 232 ரன்கள் எடுத்தது.
233 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பரபரப்பான ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி 49.3 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 235 ரன்களை எடுத்தது. இதன் மூலம் 3 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அணி த்ரில் வெற்றி பெற்றது.