திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், குடும்பத்துடன் தங்கத்தேர் இழுத்து வழிபாடு நடத்தினார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு, கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் குடும்பத்துடன் வந்தார். கோவிலில் மூலவர், சண்முகர், பெருமாள் ஆகிய சன்னதிகளில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினார். அதனைத் தொடர்ந்து, பேரனுக்கு முடி காணிக்கை செலுத்தி கோவில் யானை தெய்வானையிடம் குடும்பத்துடன் ஆசீர்வாதம் பெற்றார். இதனையடுத்து குடும்பத்துடன் தங்கத்தேர் இழுத்து வழிபாடு நடத்தினர்.