ஹேப்பி நியூஸ்! பொதுத்துறை ஊழியர்களுக்கு 20% போனஸ்

போக்குவரத்து கழங்கள், மின் பகிர்மான கழகம் உள்ளிட்ட தமிழக அரசின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு அதிகபட்சமாக 20 சதவீதம் வரை போனஸ் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் சக்தியே, நாட்டின் உற்பத்தியைப் பெருக்கி, பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தும் என்பதால், அவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், சம்பள உச்சவரம்பை தளர்த்தி, கடந்த நிதியாண்டுக்கான மிகை ஊதியம்-போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்க உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இலாபம் ஈட்டியுள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அந்தந்த நிறுவனங்களில் உபரித் தொகையை கணக்கில் கொண்டு 8 புள்ளி 33 சதவீத மிகை ஊதியம், 11 புள்ளி 67 சதவீத கருணைத் தொகை என மொத்தம் 20 சதவீதம் வரை போனஸ் வழங்கப்படும் என முதலமைச்சர் கூறியுள்ளார்.

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம், அரசு போக்குவரத்துக் கழகங்கள், நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணைய ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் கிடைக்கும்.

மேலும் ஒதுக்கக்கூடிய உபரித்தொகை இல்லாத பொதுத்துறை நிறுவனங்களான தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், சென்னை குடிநீர் வழங்கள் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கும் 10 சதவீத போனசும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியப் பணியாளர்களுக்கு 8.33 சதவீதம் போனசும் வழங்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version