சாதி பெயர்களை நீக்க அரசாணை வெளியிட்டது அரசு

தமிழ்நாட்டில் குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர் நிலைகளுக்கு வைக்கப்பட்டுள்ள சாதிப் பெயர்களை நீக்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் அடிப்படையில் பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையில் ஆதி திராவிடர் காலனி, ஹரிஜன் குடியிருப்பு, வண்ணாங்குளம் போன்ற பெயர்கள் தவிர்க்கப்பட வேண்டும். பறையர் தெரு, சக்கிலியர் சாலை போன்ற பெயர்களை நீக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது,

தெருக்கள் மற்றும் சாலைகளுக்கு திருவள்ளூவர், கபிலர், பாரதியார், பாரதிதாசன், தந்தை பெரியார், அண்ணா, காமராஜர், கலைஞர் பெயர்களையும், குளம் மற்றும் நீர் நிலைகளுக்கு ரோஜா, மல்லி, செம்பருத்தி, சூர்யகாந்தி, சாமந்தி, முல்லை ஆகிய பூக்களின் பெயர்களை வைக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சாதிப் பெயர்களை நீக்குதல் மற்றும் புதிய பெயர்களைச் சூட்டுதல் உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் வரும் நவம்பர் மாதம் 19-ஆம் தேதிக்குள் முடித்து, இது குறித்த அறிக்கையை அரசுக்கு அனுப்ப வேண்டும் என்றும் தமிழக அரசு மாவட்ட நிர்வாகங்களுக்குக் கெடு விதித்துள்ளது. சமூக சமத்துவத்தை நோக்கிய இந்தப் புரட்சிகரமான நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Exit mobile version