குஜராத்தில் பூபேந்திர படேல் தலைமையிலான பிஜேபி அரசு உள்ளது. மாநிலத்தில் அனைத்துப் பகுதிகளுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கவும், புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்கவும் வசதியாக 25 அமைச்சர்களும் ராஜினாமா செய்தார்கள்.
புதிய அமைச்சர்கள் பதவியேற்பு இன்று நடைபெற்றது. கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிபாவா ஜடேஜா உள்பட 19 புதுமுகங்களுக்கு அமைச்சராக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. முந்தைய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 6 பேர் மீண்டும் சேர்¢த்துக்கொள்ளப்பட்டுள்ளனர். ஆளுநர் ஆச்சார்ய தேவ்ரத், அமைச்சர்களுக்குப் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். உள்துறை அமைச்சர் பொறுப்பு வகிக்கும் ஹர்ஷ் சங்கவி, துணை முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார்.

















