திமுகவுடன் கூட்டணியா என்பது போக போக தெரியும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சேலத்தில் பாமக மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேர்தல் பணிகளை விரைவுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் பேசிய ராமதாஸ் தொண்டர்கள் தேர்தல் வெற்றிக்காக பாடு பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் திமுகவுடன் கூட்டணியா என்பது போக போக தெரியும் என்று கூறினார்.
















