தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வலுவிழந்து, இலங்கையின் முல்லைத்தீவு அருகே சனிக்கிழமை 4 மணியளவில் கரையை கடந்தது.
மாலை நிலவரப்படி காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கில் 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவிழக்கும் என கூறப்பட்டுள்ளது.
இதனிடையே தெற்கு கேரள கடலோர பகுதிகள், அதை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களின் ஒருசில பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை கனமழை பெய்யும் என தெரிவி க்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

















