வங்கக்கடலில் நிலவிய டிட்வா புயல், மணிக்கு 5 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து, நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது.
சென்னைக்கு தென்கிழக்கே நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வட தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரைகளுக்கு இணையாக, வட திசையில் நகர்ந்து இன்று காலை படிப்படியாக பலவீனமடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் அமுதா தெரிவித்துள்ளார்.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது. இதே போல் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.
இதனிடையே, புதுச்சேரி, காரைக்கால் சுற்றுவட்டாரத்தில் கனமழையால் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதேபோல், மாஹி, ஏனாம் பிராந்தியத்தில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

















