சென்னை, கோவை, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 17-ம் தேதி 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குமரிக்கடல் மற்றும் வங்கக்கடலின் தமிழகப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்றி நீடிக்கிறது. நாகை மாவட்டம் வேதாரண்யம், கரியாப்பட்டினம், கோடியக்கரை, வாய்மேடு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் காலை சுமார் ஒருமணி நேரம் கனமழை கொட்டியது.
இதனிடையே, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, சென்னை, கோவை ஆகிய 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
















