குடையை சரி பண்ணி வைங்க! வெள்ளி முதல் செம்ம மழை

தமிழகத்தில் வரும் 17, 18, 19 ஆகிய தேதிகளில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

17 ஆம் தேதி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசியில் விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 12 மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

18 ஆம் தேதி, நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, தேனி, தூத்துக்குடி, தென்காசி விருதுநகர், புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய 18 மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. 19 ஆம் தேதி, நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version