தமிழகம் மற்றும் புதுவையில் அக்டோபர் 16 முதல் 18 ஆம் தேதிக்குள் வடகிழக்கு பருவ மழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையத்தின் தென் மண்டல தலைவர் அமுதா தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளில் இருந்து வரும் 16 ஆம் தேதி முதல் விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக அவர் கூறினார். இரண்டு வளி மண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவுவதால், அடுத்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அமுதா தெரிவித்தார்.
மேலும், நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தேனி, திண்டுக்கல், தென்காசி, கோவை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அமுதா கூறினார்.