டிரம்ப்பின் வரி அமெரிக்காவுக்கே ஆப்படிக்கும் – புடின்

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா மற்றும் சீனாவுக்கு கூடுதல் வரிகளை விதித்திருப்பது, அமெரிக்காவுகே எதிராக திரும்பும் என, அதிபர் புதின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவிடமிருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது. இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதால் தான், உக்ரைனுக்கு எதிராக ரஷ்யாவால் ஆண்டுக்கணக்கில் போரிட முடிகிறது என, அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி வந்தார். ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தாததால், இந்திய பொருள்களுக்கான இறக்குமதி வரியை 25 சதவீதமாக அதிகரித்து, கூடுதலாக 25 சதவீதம் அபராத வரியையும் டிரம்ப் விதித்துள்ளார்.

இதனை கண்டித்துள்ள ரஷ்ய அதிபர் புதின், அமெரிக்காவின் இந்த பழிவாங்கும் செயல், அவர்களுக்கே எதிராக திரும்பும் என எச்சரித்துள்ளார். அவமானங்களை இந்தியா ஒருபோதும் தாங்கிக் கொள்ளாது என்று குறிப்பிட்டுள்ள புதின், கூடுதல் வரிகளை விதித்து எந்த நாட்டின் பொருளாதாரத்தையும் அமெரிக்காவால் முடக்கிவிட முடியாது என்றும் கூறியுள்ளார்.

Exit mobile version