தமிழகத்தில் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு இன்று தமிழகம் வர உள்ளது. வரும் 27-ம் தேதி வரை 3 நாட்களுக்கு இந்த குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர்.
தமிழகத்தில் தற்போது பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக விவசாயிகள் சாகுபடி செய்துள்ள நெற்பயிர்கள் பல இடங்களில் நீரில் மூழ்கி உள்ளன. அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளும், நேரடி கொள்முதல் நிலையங்களில் நனைந்து முளைத்துள்ளன. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.
எனவே, மத்திய உணவுத் துறை துணை இயக்குனர் தலைமையில் இரண்டு குழுக்களும், உதவி இயக்குனர் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. 9 பேர் கொண்ட இந்த மத்தியக் குழுவினர் சனிக்கிழமை தமிழகம் வர உள்ளனர். வரும் 27-ம் தேதி வரை 3 நாட்களுக்கு இந்த குழுவினர் ஆய்வுசெய்ய உள்ளனர்.
செங்கல்பட்டு, தஞ்சை. மயிலாடுதுறை, திருச்சி. புதுக்கோட்டையில் நாளை ஒரு குழுவும், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர், நாகை, மதுரை. தேனி, மாவட்டங்களில் ஞாயிற்றுக் கிழமை மற்றொரு குழுவும், கடலூர் மாவட்டத்தில் வரும் 27-ம் தேதி 3வது குழுவும் ஆய்வு செய்ய உள்ளது.

















