ஒகேனக்கல் அருவிக்கு வரும் 65 ஆயிரம் கனஅடிதண்ணீர் அப்படியே மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. இதனால், கொள்ளிடம் காவிரியில் சுமார் ஒரு லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்படுவதால், கரையோரமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழைகாரணமாக கேஆர்எஸ் மற்றும் கபினி அணைகளில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், ஓகேனக்கல் அருவிக்கு நீர்வரத்து 65 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளதால், அருவியில் குளிக்கவும், பரிசல்களை இயக்கவும் 3-வது நாளாகதடைநீடிக்கிறது.
ஏற்கனவேநிரம்பிவிட்டமேட்டூர் அணைக்கு வரும் உபரிநீர் அப்படியே காவிரி ஆற்றில் திறந்துவிடப்படுகிறத. மேலும், பவானி அணையில் இருந்தும், பல்வேறுபகுதிகளில் பெய்யும் மழையால் கிளை ஆறுகளில் இருந்து தண்ணீர் வருவதால், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
