தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணிகளைத் தொடர அனுமதித்துள்ள உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
வாய்க்கு வந்த காரணங்களைக் கூறி தமிழகத்தின் எஸ்.ஐ.ஆருக்கு தடை விதிக்குமாறு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்த வழக்கில், தடைவிதிக்க மறுத்திருப்பதை அவர் தனது எக்ஸ் தளத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
போலி வாக்காளர்களைக் கண்டறிந்து, பொதுமக்களின் ஜனநாயக உரிமையைக் காக்கும் எஸ்.ஐ.ஆர்-ஐ எதற்காகக் கண்மூடித்தனமாக எதிர்க்கின்றன என்பதும், நேர்மையான முறையில் மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டால் திமுக எதற்காக பதறுகிறது என்பதும் புரியாத புதிராகவே உள்ளது என்று நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
இனியாவது குளறுபடிகளுமின்றி எஸ்.ஐ.ஆர் பணிகளை நேர்மையான வழியில் செய்து முடிக்க திமுக அரசு ஒத்துழைக்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

















