தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நியமனங்களில் முறைகேடுகள் நடந்திருப்பதால், சிபிஐ விசாரணை வேண்டும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த ஆண்டு 2 ஆயிரத்து 538 காலிப் பணியிடங்களை நிரப்ப, ஒரு பணியிடத்திற்கு 35 லட்சம் ரூபாய் வரை பெற்று தகுதியற்ற நபர்களை நியமித்து 888 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதன் பல்லாயிரக் கணக்கான திறமையான இளைஞர்களின் வேலைவாய்ப்பை திராவிட மாடல் அரசு பறித்துள்ளதாக நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். இதுபோன்று கடந்த நான்கரை ஆண்டுகளில் எத்தனை மோசடிகள் நடந்திருக்கும் என யோசிக்கையில் மலைக்க வைப்பதாக நயினார் அவர் கூறியுள்ளார்.
திமுக அரசின் ஊழல் மோகத்தை அடக்க சிபிஐ விசாரணை வேண்டும் என தமிழ்நாடு பாஜக சார்பில் வலியுறுத்துவதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

















